சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை
கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி நடந்த த.வெ.க., பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரை த.வெ.க.,வினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலத்தில் கைது செய்யப்பட்ட அவரை, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இரவு, 8:00 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரணை நடத்திய பின், கரூர் ஜே.எம்.,1 நீதிமன்றத்தில், வெங்கடேசன் அஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, வெங்கடேசனை, 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
-
வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்
-
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங் தலைவர்கள் செல்வர்: அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
-
ஒரே நாளில் 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விஜய் வீடு, கமல் ஆபீஸ் , பள்ளிகளில் சோதனை
Advertisement
Advertisement