வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்

சென்னை; வில்லிவாக்கத்தில், 53 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
கொளத்துார் சுற்று வட்டாரப் பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வண்ண மீன் பண்ணைகள் உள்ளன. வண்ண மீன் விற்பனை, அது சார்ந்த தொழில்களை விரிவுபடுத்தும் வகையில், வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில், வண்ண மீன் வர்த்தக மையம், 53 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.
மூன்று தளங்களில் மொத்தம், 188 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். இது சம்பந்தமாக இம்மையத்தில், அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர், அதிகாரிகளுடன் நேற்று கலந்தாலோசித்தனர்.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தில் உள்ள கடைகள், முறையாக விளம்பரம் செய்து, மனுக்கள் பெறப்பட்டு, கடைகாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது,'' என்றார்.
இந்நிலையில், கடைகளை வாடகைக்கு ஒதுக்குவது தொடர்பான வியாபாரிகள் சந்திப்பு கூட்டம் சென்னையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மேலும்
-
காசாவில் போர் நிறுத்தம் அமல்; இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
-
காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.90,720
-
ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அபாரம்; வலுவான நிலையில் இந்திய அணி
-
டிரம்ப் குறி தவறியது; நோபல் பரிசு கனவு தவிடுபொடி!
-
வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு