வன உயிரின வார விழா நிறைவு
மதுரை: மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் அக். 2 முதல் 8 வரை வன உயிரின வார விழா நடந்தது. 'மனிதன் - வனவிலங்கு இயைந்து வாழ்தல்' எனும் கருப்பொருளுடன் மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் ஆனந்த், வனச்சரக அலுவலர்கள் வெனிஷ், சாருமதி, அன்னக்கொடி, தீனதயாளன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
அக். 4, 5ல் குட்லாடம்பட்டி அருவி, உசிலம்பட்டி போத்தம்பட்டி கண்மாயில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் நெகிழி குப்பையை அகற்றினர். அக்.6, 7ல் சாமநத்தம் கண்மாய், இடையப்பட்டி வெள்ளிமலை பல்லுயிர் பாரம்பரிய தலத்திற்கு என்.சி.சி., மாணவர்கள், தன்னார்வலர்களுடன் இயற்கை பயணம் மேற்கொண்டனர். அக்.3 முதல் 8 வரை ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலுார் பாரதிதாசன் அகாடமி மாணவி துர்கா முதல் பரிசு வென்றார். அவரை அகாடமி நிறுவனர் சூர்யா, நிர்வாகிகள் பாராட்டினர்.
மேலும்
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
-
வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்