திருஆவினன்குடியில் கலாகர்ஷன பூஜை

பழநி: பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க கலாகர்ஷன பூஜை நடைபெற்றது.
திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அர்த்தமண்டப நுழைவுவாயிலில் இரட்டை மரக்கதவு, நிலை வாசலில் வெள்ளித்தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டு இருந்தன. அவை சேதமடைந்துள்ளதால் வெள்ளி தகடுகள் புனரமைக்கும் பணி துவங்க நேற்று (அக். 9) இரவு 7:00 மணிக்கு கலாகர்ஷன பூஜை, வாஸ்து பூஜை நடைபெற்றது.
வெள்ளி தகடுகள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்ற பின் அக். 12 காலை 6:00 மணிக்கு புணராவாஹனம் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4:00 மணிக்கு விளான பூஜை நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement