பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகின்றனர். இந்த சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்துள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தது. நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கிழக்கு காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நூர் வாலி மெஹ்சுத் பாதுகாப்பாக இருக்கிறார். இருப்பினும் அவரது மகன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.










மேலும்
-
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை அடைய விண்வெளி துறை முக்கியம்!
-
ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது
-
இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கன் அமைச்சர்!
-
நோபல் பரிசு பெறப்போகும் மரியா கொரினா மச்சாதோ
-
ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன்; எச்சரிக்கிறார் அன்புமணி
-
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை