மூணாறில் ஐ.என்.டி.யு.சி., தர்ணா

மூணாறு: மூணாறு பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கும் தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் பெற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சான்றிதழ் பெற இயலாத நிலை நீடித்து வருகிறது.

தவிர நிலப்பட்டா, 'லைப்' எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஆகியவை வழங்குவதில்லை போன்றவற்றை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. சார்பில் மூணாறு வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி. மண்டல தலைவர் மார்ஸ்பீட்டர் தலைமை வகித்தார்.

தேசிய செயலாளர் மணி துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் முனியாண்டி, துணை தலைவர் கருப்பசாமி, பொது செயலாளர்கள் முத்துராஜ், ஆன்ட்ரூஸ், செயலாளர் ஜெயராஜ், வட்டார தலைவர் குமார், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement