முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை
சேலம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் தனியார் பள்ளியில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு வரும், 12ல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில், 38 மையங்களில், 668 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில், 13,113 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில், 187 மாற்றுத்திறனாளிகள், சொல்வதை எழுதுபவர் துணையுடன், 35 பேர் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பணி நாடுனர்களுக்கான அறிவுரைகள், அவர்களுக்கான அனுமதி சீட்டில் வழங்கப்பட்டுள்ளது. காலை, 9:30 மணிக்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள் அனுமிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வை கண்காணிக்க, 38 முதன்மை கண்காணிப்பாளர்கள், 38 துறை அலுவலர்கள், 668 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகின்ற முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வை நேர்மையாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, ஆதி திராவிட நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை