போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

போடி: போடி பகுதியில் நேற்று மதியம் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவங்கியது.
போடி பகுதியில் சில மாதங்களாக மழை இன்றி ஆறு, கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, தோட்ட பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு இருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். நேற்று மதியம் போடி, குரங்கணி, கொட்டகுடி, ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, தேவாரம் பகுதியில் பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜர் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மலைப் பகுதியில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது. நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் பெய்ய துவங்கிய கன மழையானது 4:30 மணிக்கு மேலும் நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு விபரம்
மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி 30.8 மி.மீ., பெரியகுளம் 14.6 மி.மீ.,மஞ்சளாறு 9 மி.மீ., சோத்துப்பாறை 6.8 மி.மீ., பெரியாறு அணை 14.4 மி.மீ., சண்முகாநதி அணை 1.6 மி.மீ., கூடலுார், வைகை அணை தலா 1.2 மி.மீ.,
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை