ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் குமுறல்
பனமரத்துப்பட்டி, அவீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெருமாகவுண்டன்பட்டி ஊராட்சியில் மண்கரடு சாலையில், ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தார்ச்சாலையின் தரம் பற்றி, வீரபாண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜமுத்து நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பெண்கள், 'எம்.எல்.ஏ., ராஜமுத்துவிடம், ராமாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால், வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு செல்ல இடையூறாக உள்ளது. 24 மணி நேரமும் சந்து கடையில் மது விற்பனை நடப்பதால், குடிமகன்களின் தொல்லை தாங்க முடியவில்லை,' என, குமுறலுடன் தெரிவித்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, பெண்களிடம் எம்.எல்.ஏ., தெரிவித்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலர் வெங்கடேசன் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement