திருக்குறள் திருப்பணி பயிற்சி மையம் மேட்டூர் பள்ளியில் நாளை துவக்கம்
மேட்டூர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சேலம் மாவட்டம் சார்பில் மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார் சட்டசபை தொகுதிகளுக்கு உள்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி மையம் மேட்டூர், நாட்டாமங்கலம் வள்ளுவர் வாசுகி பள்ளியில் நாளை (அக்.11) காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.
மைய பொறுப்பாளர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பாரி, ஓமலுார் தாராபுரம் அரசு பள்ளி தமிழாசிரியர் புலவர் கண்ணன், பெரியார் பல்கலை தமிழ் விரிவுரையாளர் சிலம்பரசன், மேச்சேரி, வெள்ளாறு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சண்முகம் ஆகியோர் திருக்குறள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைவருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க வருவோருக்கு மேட்டூர் பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு பகுதியில் இருந்து பள்ளி வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் தொடர்புக்கு: 80125 28388, 98940 19788, 89037 89388 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை