கமாண்டோ வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

தேனி: தேனி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்கமாண்டோ வீரர்களுக்கான 4 நாட்கள் பயிற்சி அக்.7ல் பெரியகுளத்தில் நடந்தது.

அன்றுநிலைய அலுவலர் பழனி முன்னிலையில் வீரர்களுக்கு பேரிடர் மீட்பு நேரத்தில் கயிறுகளில் முடிச்சுகளை விரைவாக எவ்வாறு அமைப்பது குறித்த பயிற்சியும்.அக்.,8ல் தேனி தீயணைப்பு நிலையத்தில் முடிச்சு பயிற்சியும், அக்.9ல் போடி முந்தல் பகுதியில் அலைபேசி டவர்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பயிற்சியும் நடந்தன. நேற்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நீர்நிலைகளில் அடித்து செல்லப்பட்டவர்களை கயிறு மூலம் சென்று மீட்கும் பயிற்சியும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் பயிற்சியை துவக்கி வைத்தார்.

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேசன், கமாண்டோவீரர்கள் பங்கேற்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்தலைமையில் இப்பயிற்சி கமாண்டோ வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisement