இன்று 14 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 10) 14 மாவட்டங்களிலும், நாளை (அக் 11) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று (அக் 09), மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 1730 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (அக் 10) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக் 11) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும்
-
ஹமாஸ் பிடியில் இருக்கும் ஹிந்து இளைஞர்: விரைவில் விடுதலையாக வாய்ப்பு
-
ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்
-
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை அடைய விண்வெளி துறை முக்கியம்!
-
ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது
-
இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கன் அமைச்சர்!
-
நோபல் பரிசு பெறப்போகும் மரியா கொரினா மச்சாதோ