வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

25

ஸ்டாக்ஹோம்: வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.


ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நோபல் பரிசை இன்று (அக் 10) நார்வே குழுவினர் அறிவித்தனர். வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவித்தனர்.



வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.

யார் இந்த மரியா கொரினா மச்சாடோ?



* வெனிசுலா நாட்டின் பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ.

* இவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் முக்கிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார்.

* இவர் வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியவர். மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுத்துள்ளார்.

* கடந்த 2024ம் ஆண்டு தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சியினர் மறுத்தனர். அப்போது நடந்த போராட்டத்தில் மரியா கொரினா மச்சாடோ கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


@block_P@

நார்வே குழுவினர் பாராட்டு

உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என பரிசு அறிவித்த நார்வே குழுவினர் பாராட்டி உள்ளனர்.block_P

Advertisement