காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.90,720

2


சென்னை: சென்னையில் இன்று( அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனை ஆகிறது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் இரண்டு முறை கூட தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ( அக்டோபர் 8), ஆபரண தங்கம், கிராம், 11,385 ரூபாய்க்கும், சவரன், 91,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்று (அக்டோபர் 9) காலை தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 11,425 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு அதிரடியாக, 6 ரூபாய் உயர்ந்து, 177 ரூபாய்க்கு விற்பனையானது.


இந்நிலையில், இன்று (அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260க்கு விற்பனை ஆகிறது.

ஆனால் மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90. 720 ஆக விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.11,320 விற்பனை ஆனது.


வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ரூ.4 உயர்ந்து ரூ.184 விற்பனை ஆகிறது.

Advertisement