காசாவில் போர் நிறுத்தம் அமல்; இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

8

ஜெருசலேம்: காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல்-காசா போர் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.


போரை நிறுத்தி, குறைந்தபட்சம் சில பிணைக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல்கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.


இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போர்நிறுத்த ஒப்பந்தம் மதியம் 12:00 மணிக்கு அமலுக்கு வந்தது. மதியம் 12:00 மணி முதல், பிணைக்கைதிகளை விடுதலை செய்யும் பணி நடந்து வருகின்றன.


போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தெற்கு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு அச்சுறுத்தல் கொடுத்தாலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement