இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

மதுரை: ''இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் தலைவர் (முதல்வர்) ஆவார்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மதுரையில் இன்று (அக் 12) தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் முதல்வர் ஆவார். பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதிற்கு தண்டிக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்றமே கேள்வி கேட்கும் ஒரே ஆட்சியாக தான் திமுக இருக்கிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். அது எப்படி நடந்தது அரசு மற்றும் போலீசாரின் குற்றம். காவல் துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் வைத்து இருக்கிறார். ஆனால் தினம் தினம் படுகொலை. சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெரிய வினோதம். சாராயம் குடித்து இறந்து போனால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள்.
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது. இன்று முதல் நாட்கள் குறிக்கப்படுகிறது. திமுக அரசின் ஆட்சி காலத்தின் நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆட்சியில் அலங்கோலம் மக்கள் மத்தியில் இருந்து வெகு விரைவில் தீர்க்கப்படும். விரைவில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். எங்களுடைய தலைவராக இபிஎஸ் வருவார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.




மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
-
50 ஆண்டுகளில் முதல்முறை; பிஎஸ்எப் 'ஏர்விங்' பிரிவில் பெண் பொறியாளர்!
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!
-
இருமல் மருந்து விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச மறுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
தோல்வியை தவிர்க்கப் போராடும் வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணி அபார பந்துவீச்சு
-
திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு