திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், சோதனைச் சாவடியிலும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தச்சநல்லூரில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனின் நுழைவு வாயில் மீது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், நுழைவு வாயில் அருகே இருக்கும் கோவிலின் சுவர் பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதேபோல, தாழையூத்து சோதனை சாவடியிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சோதனை சவாடி மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரே நபர் தானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும்
-
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி; 20 பேர் காயம்
-
கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி
-
200 ஆப்கன் தலிபான்களை கொன்றோம்; சொல்கிறது பாகிஸ்தான் ராணுவம்
-
லாலு கட்சி எம்எல்ஏ.க்கள் இருவர் ராஜினாமா: ஆர்ஜேடி.யில் அதிர்ச்சி
-
பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
-
50 ஆண்டுகளில் முதல்முறை; பிஎஸ்எப் 'ஏர்விங்' பிரிவில் பெண் பொறியாளர்!