தவெக நிர்வாகி நிர்மல் குமார் கைது

கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்.,27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தவெக முக்கிய நிர்வாகி ஆனந்த் தலைமறைவாக உள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக தவெக கட்சி மற்றும் விஜயை விமர்சித்திருந்தது.
இந்த நிலையில், விஜய் குறித்தும், அவரது கட்சி பற்றியும் விமர்சித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
-
50 ஆண்டுகளில் முதல்முறை; பிஎஸ்எப் 'ஏர்விங்' பிரிவில் பெண் பொறியாளர்!
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!
-
இருமல் மருந்து விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச மறுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
தோல்வியை தவிர்க்கப் போராடும் வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணி அபார பந்துவீச்சு
-
திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு