மாணவியருக்கு 'தொல்லை' தந்த 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

1

சென்னை : மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர்கள் இருவருக்கு, கட்டாய ஓய்வு வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலை தொலையுணர்வு துறை இணை பேராசிரியர் ரமேஷ், வணிகவியல் துறை பேராசிரியர் கணேசன் ஆகியோர் மீது, சில மாதங்களுக்கு முன், மாணவியர் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, பல்கலை உள்ளக புகார் குழு விசாரணை நடத்தியது.

இதில், இரண்டு பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டும் உறுதியானது. இதற்கிடையில், பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சங்கர் தலைமையில், கடந்த மாதம் இறுதியில் நடந்தது.

அதில், கல்லுாரி கல்வி இயக்குனர் சுந்தரவல்லி மற்றும் சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், இரண்டு பேராசிரியர்கள் மீதான உள்ளக விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

மு டிவில், இரண்டு பேராசிரியர்களுக்கும் கட்டாய ஓய்வு வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும், இதற்கான ஆணையை, இரண்டு பேராசிரியர்களும் பெற மறுப்பதாக கூறப்படுகிறது.

Advertisement