மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

1

கொல்கட்டா : 'காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படாமல் தடுக்க பசுமை பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்' என, மேற்கு வங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திஉள்ளது.

நாடு முழுதும் வரும் 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில், மேற்கு வங்கத்தில் காளி பூஜையும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இதையொட்டி பசுமை பட்டாசு வெடிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி மேற்கு வங்க மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கல்யாண் ருத்ரா கூறுகையில், “காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இரவு 8:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும்.

''மத்திய அர சால் அங்கீகரிக்கப் பட்ட பசுமை பட் டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்,” என்றார்.

Advertisement