போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

புதுடில்லி: போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் (என்சிபி) வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், சென்னையின் என்சிபி துணை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர். சுதாகருக்கு, தெற்கு மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் பதவியை வகிக்க முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுதாகர், தற்போது அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் வடகிழக்கு பிராந்திய டிடிஜியாக உள்ளார். இவர் தமிழகத்தில் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் மற்றும் கோவை மேற்கு மண்டல ஐஜி உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.
என்சிபியின் புதிய பணியில், அவர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருப்பார்.

மேலும்
-
என்சிபி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: பதிலளிக்க அஜித்பவார் நோட்டீஸ்
-
இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்; கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா பேட்டி
-
வங்கதேச ரசாயன கிடங்கில் தீ: 9 பேர் பலி
-
மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளுக்கு பாராட்டு
-
அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்துவதா; அண்ணாமலை ஆவேசம்
-
அடையாள அரசியலுக்கு சென்றால் அழிவு ஏற்படும் : எச்சரிக்கிறார் சிங்கப்பூர் அமைச்சர்