வங்கதேச ரசாயன கிடங்கில் தீ: 9 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தில் ரசாயன கிடங்கு மற்றும் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலை மற்றும் ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயன ஆலையில் பிளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. இதனால், தீ மளமளவென பரவியது. ஜவுளி ஆலையிலும் தீ வேகமாக பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Advertisement