சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கம்பம் : சுருளி அருவியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணி களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கம்பம் பள்ளத்தாக்கில் சாரல் மழை பெய்து வருகிறது. மேகமலை பகுதியில் பகலில் சாரல் மழையும், இரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை இரவங்கலாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவில் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடுவதால் அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடியது.
காலையில் வழக்கம் போல ரோந்து சென்ற ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். இதனால் நேற்று காலையில் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தால் குளிக்க அனுமதி வழங்கப்படும் என ரேஞ்சர் தெரிவித்தார்.
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை