அடிப்படை பண்பு இல்லாதவர் த.வெ.க., தலைவர் விஜய்

1

கரூரில் உயிர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டவரே, வழக்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளார். இதை ஏன் உச்ச நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை? மொத்தமாக 41 உயிர்களை பலி கொண்ட மிகப் பெரிய துயரச் சம்பவத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற அடிப்படை பண்பு கூட இல்லாதவர் தான் த.வெ.க., தலைவர் விஜய். எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்களை இந்த தமிழ் சமூகம் பார்த்திருக்கிறது. ஆனால், இப்படியொருவரை இதுவரை பார்த்தது இல்லை. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 - 50 ரூபாய் வரை மாமூல் வாங்குகின்றனர். தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்கிறது என்றே தெரியவில்லை.

- பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர், சி.பி.எம்.,

Advertisement