கன மழையால் கூரை வீடு சுவர் சேதம்

சங்கராபுரம் : பூட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி லட்சுமி என்பவருக்கு சொந்தமான கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கோவிந்தசாமி, லட்சுமி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

Advertisement