பல கோடி மதிப்புள்ள பழைய எம்.பி., அலுவலகம் தனியாருக்கு தாரைவார்ப்பா?

மதுரை : மதுரையில் ரூ.பல கோடி மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய எம்.பி., அலுவலகம் தனியார் கபே நடத்த 'சலுகை'யுடன் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படும்.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் தல்லாகுளம் பெருமாள் கோயில் எதிரே 36 சென்ட் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்துடன் கூடிய வளாகம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.பல கோடி. 2014 - 2019 வரை அ.தி.மு.க., எம்.பி.,யாக இருந்த கோபாலகிருஷ்ணன் இந்த வளாகத்தை பராமரித்து அவரது அலுவலகமாக பயன்படுத்தினார். அதன் பின் தற்போது வரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகமாக செயல்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் இணையவழி டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் அந்த இடத்தில் கபே, கோ ஒர்க்கிங் பிளேஸ்,சிறுவர் நுாலகம் அமைக்க வளாகத்தின் கட்டடம் அமைந்துள்ள 1098 சதுர அடி மட்டும் ஏலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் 1098 சதுர அடி இடத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த வளாகத்தில் உள்ள பல ஆயிரம் சதுர அடிகள் இடத்தையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டியது வரும். இதன்மூலம் யாரோ ஒரு தனியாருக்காக மாநகராட்சி இவ்வாறு நுாதன சலுகையுடன் டெண்டர் வெளியிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் டெண்டரில் 'கபே'வுக்காக என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.
* மீண்டும் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வழியா
நகரின் முக்கிய பகுதியான அந்த இடத்தில், மாநகராட்சி வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் ரூ.பல லட்சம் வாடகை வருவாய் கிடைக்கும் அல்லது அதே இடத்தை ஏலத்தில் எடுக்கும் தனியாருக்கு வளாகத்தின் உள்ள முழு சதுர அடிகளுக்கும் வாடகையாக நிர்ணயிக்கலாம். அவ்வாறு செய்தாலும் வருவாய் அதிகரிக்கும்.
ஏற்கனவே தனியார் கட்டடங்களுக்கு சொத்துவரி விதிமீறி நிர்ணயம் செய்ததால் ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரில் மேயரின் கணவர், மாநகராட்சி அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பலர் கைதாகி தற்போது ஜாமினில் வந்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் இந்த இணையவழி டெண்டரில் மாற்றம் செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன் கூறுகையில், சம்பந்தப்பட்ட அந்த வளாகம் 100 ஆண்டுகள் பழமையானது. இதுதொடர்பான டெண்டர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.
@block_B@ பாக்ஸ்...---* தொடரும் மாநகராட்சி தாரைவார்ப்புகள்... இந்த இடத்தை ஏலம்
எடுப்பதில் அரசியல் பின்புலத்தில் சென்னை, மதுரை வி.ஐ.பி.,க்கள் பலர் போட்டி போடுகின்றனர். அமைச்சர்கள் சிலர் ஆளுக்கு ஒருவரை சிபாரிசு செய்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதுபோல் சிபாரிசு அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் தனியாருக்கு குறைந்த வாடகையில் தாரைவார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, பல ஆண்டுகளாக ஒரு தனியார் பள்ளிக்கு மாதம் ரூ.1 வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி கூட்டத்தில் துணைமேயர் (மார்க். கம்யூ.,) நாகராஜன் அதிருப்தி தெரிவித்து, அதுபோன்ற இடங்களை மாநகராட்சி மீட்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதுவரை அந்த பள்ளிக்கான திருத்தப்பட்ட வாடகை நிர்ணயம் மேற்கொள்ளவில்லை. பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி இடம் 'சலுகையில்' தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. 'சிபாரிசுகளால்' மாநகராட்சிக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுவதை அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.block_B

மேலும்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
-
அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல் குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது
-
தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு உண்மையா? புதிய முதலீடுகள் விவாதிக்கவில்லை: பாக்ஸ்கான்
-
அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம்; பிரதமர் மோடி புகழாரம்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம்
-
ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது: புடினை கடுமையாக சாடிய டிரம்ப்