தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம்

சென்னை: சென்னையில் இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 13), ஆபரண தங்கம் கிராம், 11,580 ரூபாய்க்கும், சவரன், 92,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உச்சம்.
நேற்று (அக் 14) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 245 ரூபாய் உயர்ந்து, 11,825 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,960 ரூபாய் அதிகரித்து, 94,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம், 9 ரூபாய் உயர்ந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்பனை ஆகிறது.
இம்மாதம், 1ம் தேதி தங்கம் சவரன், 87,600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் மட்டும் சவரனுக்கு எப்போதும் இல்லாத வகையில், 7,280 ரூபாய் அதிகரித்துள்ளது.
மேலும்
-
அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம்; பிரதமர் மோடி புகழாரம்
-
ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது: புடினை கடுமையாக சாடிய டிரம்ப்
-
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்பினராக தேர்வானது இந்தியா!
-
தமிழகம் உலகின் உதிரிபாக உற்பத்தி மையமாக மாறும்!
-
'யூவோ டெக் பிளஸ் 475 டி.ஐ.,' டிராக்டர் ஆறு ஆண்டு உத்தரவாதம் வழங்கும் 'மஹிந்திரா'
-
மஹிந்திரா 'பொலேரோ' எஸ்.யூ.வி., 'வொர்க்ஹார்ஸ்': 4 மீட்டரில், 7 சீட்டர் கார்