இளைஞர் எழுச்சி நாள்: விழிப்புணர்வு போட்டி

காஞ்சிபுரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில், பள்ளி மாணவ - மாணவியருக்கான, 'இளைஞர் எழுச்சி நாள்' விழிப்புணர்வு போட்டி வாலாஜாபாதில் நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்தநாள் விழாவையொட்டி, மாவட்ட அளவில், பள்ளி மாணவ - மாணவியருக்கான, 'இளைஞர் எழுச்சி நாள்' விழிப்புணர்வு போட்டி வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், பள்ளி செயலர் சாந்தி அஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜாபாத் அரிமா சங்க தலைவர் சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
பேச்சு, கட்டுரை, அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி துணைஆய்வாளர் பாலச்சந்தர் வரவேற்றார். ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
-
மாதம் 12 லட்சம் ஜோடி 'சாக்ஸ்' திருப்பூரில் இருந்து ஏற்றுமதி
-
பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
-
சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு
-
ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம்
-
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு