சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு

சென்னை: கடந்த ஜூலை - செப்., காலாண்டில், நாட்டின் எட்டு பெருநகரங்களில் ஐந்தில் வீடு விற்பனை வீழ்ச்சி கண்ட நிலையில், சென்னையில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான பிராப்டைகர் வெளியிட்ட அறிக்கை:

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மும்பை, புனே, டில்லி, ஆமதாபாத் ஆகிய பெருநகரங்களில் வீடு விற்பனை குறைந்தது. மாறாக, சென்னை, பெங்களூரு, கொல்கட்டா, ஹைதராபாத் நகரங்களில் அதிகரித்துள்ளது.

எட்டு பெருநகரங்களில் கடந்த ஜூலை முதல் செப்., வரை 95,547 வீடுகள் விற்பனையாகின. அவற்றில், 2024ம் ஆண்டின் இதே காலத்தில், சென்னையில் 3,560 வீடுகள் விற்ற நிலையில், தற்போது 7,862 வீடுகள் விற்பனையாகின.

அதிகபட்சம் ஹைதராபாத் 53 சதவீத உயர்வு கண்ட நிலையில், சென்னையில் வீடு விற்பனை இரு மடங்குக்கு மேல் வளர்ச்சி கண்டு, 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் எட்டு நகரங்களில், 2024 ஜூலை - செப்., காலாண்டில் 96,544 வீடுகள் விற்ற நிலையில், தற்போது 1 சதவீதம் குறைந்து 95,547 வீடுகள் விற்பனையாகின.

இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.

டாப் 8 நகரங்கள் வீடு விற்பனை (ஜூலை - செப்., 2025) நகரம் 2024 2025 சதவீதம் மும்பை 30,010 23,334 -22 புனே 18,004 12,990 -28 டில்லி 10,098 7,961 -21 ஆமதாபாத் 9,352 8889 -5 சென்னை 3,560 7,862 110 பெங்களூரு 11,160 13,124 18 ஹைதராபாத் 11,564 17,658 53 கொல்கட்டா 2,769 3,729 33

Advertisement