காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.53 லட்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 லட்சத்து 41,982 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.
இதில், 53 லட்சத்து 41,982 ரூபாய் ரொக்கமும், 248 கிராம் தங்கமும், 772 கிராம் வெள்ளியும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
-
மாதம் 12 லட்சம் ஜோடி 'சாக்ஸ்' திருப்பூரில் இருந்து ஏற்றுமதி
-
பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
-
சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு
-
ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம்
-
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு