உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்

உத்திரமேரூர்:- உத்திரமேரூர் ஏரியில் பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக மண் கடத்தப்படுகிறது. உத்திரமேரூர் ஏரி நீரை கொண்டு 20 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், வேடபாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் உள்ள ஏரிப்பகுதி, தண்ணீர் இன்றி வறண்ட நிலப்பகுதியாக உள்ளது.

இந்த ஏரிப்பகுதியில் மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக மண் அள்ளி, டிராக்டரில் கடத்தி வருகின்றனர்.

ஏரியில் மண் அள்ள எந்தவித அனுமதியும் இல்லாத நேரத்தில், இது போன்ற மண் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஏரிப்பகுதியில் தொடர்ந்து மண் கடத்தல் சம்பவங்கள் நடந்தால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து உத்திரமேரூர் நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் ஏரியில் மண் அள்ள எந்தவித அனுமதியும் யாருக்கும் இல்லாதபோது, மண் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

'சட்டத்திற்கு புறம்பாக டிராக்டரில் மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement