பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
எனவே, பூண்டி ஏரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்கள் மற்றும் உபரி நீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
* பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 76 சதவீதம் இப்போது தண்ணீர் தேங்கி உள்ளது.
ஏரிக்கு விநாடிக்கு 6,970 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* புழல் ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 82 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 432 கன அடி தண்ணீர் வருகிறது. 709 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 1,196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விநாடிக்கு 945 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* தேர்வாய் கண்டிகை ஏரியில் 87 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது.
விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
* சோழவரம் ஏரியில் 55 சதவீதம் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
வாசகர் கருத்து (7)
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
24 அக்,2025 - 14:24 Report Abuse
இங்கு பாருங்கள் வெள்ளம் வந்தா ஏன் தண்ணீர் தேங்குது, தண்ணீர் வடிந்து விட்டால் தண்ணீர் வீணாக சேமித்து வைக்கவில்லை என்று எப்படி அலப்பறை பாருங்கள், அனால் ஒன்று அடுத்த ஏப்ரல் மே தேர்தல் நேரங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது இது தான் சமூக ஆர்வலர்களின் கவலை 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 அக்,2025 - 16:30Report Abuse
இது ஓசிகோட்டர் கொத்தடிமையின் கதறல்னு தெளிவா சொல்லு 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
24 அக்,2025 - 12:12 Report Abuse
வெள்ளம் வந்தா நாங்க தானே மக்களுக்கு சாப்பாடு குடுக்குறோம்ன்னு ஒரு ஓட்டு ஓட்டுவாரு. கூட்டு+ஆணி கட்சிங்குறதால சட்ட சபையில் கிண்டலா பேசுற மாதிரி தம்பி செல்வ பெருந்தொகை கிட்ட பேச முடியாது. அதுனால அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க ன்னு சொல்லி சிரிச்சிடலாம். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
24 அக்,2025 - 11:55 Report Abuse
இந்தியாவில் கடலுக்கு நீர் வழங்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம். 0
0
Vasan - ,இந்தியா
24 அக்,2025 - 13:03Report Abuse
அதனால்தான் தமிழகத்தை ஒட்டியுள்ள கடலில் நீர் உப்பு கரிப்பதில்லை. 0
0
duruvasar - indraprastham,இந்தியா
24 அக்,2025 - 13:12Report Abuse
தமிழக மக்களின் கண்ணீரில் வேண்டுமளவுக்கு உப்பு இருக்கிறது 0
0
Vasan - ,இந்தியா
24 அக்,2025 - 14:41Report Abuse
நாங்கள் மழை நீரை கடலுக்கு அனுப்பி, கடலில் தேக்கி வைத்து, பின்னர் சுத்திகரித்து குடிநீராக மாற்றி பயன்படுத்துவோம். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement