பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூரின் குடும்பத்தினரை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று (அக் 24) ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். முன்னதாக, சமஸ்திபூருக்கு வந்த பிரதமர் மோடி பீஹார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் உடன் இருந்தார்.