நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்

4

சென்னை: கரூர் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அக்., 7ல் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதி மன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'சமூக வலைதளத்தில் பதிவிட்டதை நீக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன், இரண்டு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன், ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement