இரண்டு பைக்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி அருகே உள்ள கமலம் காம்பளக்ஸில் வசிப்பவர் குமரேசன், 34; மளிகை கடை நடத்தி வருகிறார்.

கடந்த 25ம் தேதி இரவு கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது பைக் மாயமானது.

இதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த கல்லாநத்தம் காட்டுக்கொட்டாய் சேர்ந்த வெங்கடேசன், 33; கடந்த 24ம் தேதி காலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு முன்பு நிறுத்திய பைக் மாயமானது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement