தாய்லாந்தில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
புதுடில்லி: தாய்லாந்தில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: தாய்லாந்து அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்து எங்களுக்குத் தெரியும். அவர்கள் கடந்த சில நாட்களாக மியான்மரில் இருந்து தாய்லாந்திற்குள் நுழைந்துள்ளனர்.
தாய்லாந்தில் தேவையான சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, அவர்களை திருப்பி அனுப்பவும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள்
தாய்லாந்து அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியர்கள் தாய்லாந்திற்கு எவ்வாறு நுழைந்தார்கள் என்பது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விரிவான தகவல்களை வழங்கவில்லை என்றாலும், மியான்மரில் நடந்து வரும் மோதலில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், இன ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறை காரணமாக சமீபத்திய மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் எல்லையைத் தாண்டிச் சென்று உள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் மட்டும், 500 இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்டோர் தாய்லாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய்லாந்துக்கு இவனுக ஏன் போனாங்க ?