புரோ கபடி: பைனலில் புனே

புதுடில்லி: புரோ கபடி லீக் பைனலுக்கு புனே அணி முன்னேறியது. தகுதிச் சுற்றில், 50-45 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு டில்லி அணி முன்னேறியது. டில்லியில் நடந்த தகுதிச் சுற்று-2ல் புனே, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 24-19 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட புனே அணியினர், தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்களை மூன்று முறை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் புனே அணி 50-45 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது முறையாக (2022, 2023, 2025) பைனலுக்குள் நுழைந்தது. புனே அணிக்கு ஆதித்யா ஷிண்டே (22 புள்ளி) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் 'ஆல்-ரவுண்டர்' பாரத் 23 புள்ளி பெற்றார்.


பைனலில் (அக். 31) டில்லி, புனே அணிகள் மோதுகின்றன.

Advertisement