திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், விவசாயிகள் சாலையில் காத்திருக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, சாக்குகளில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவற்றை குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள் வராததால், நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கி கிடக்கின்றன.
கடந்த, மூன்று தினங்களாக, மழை குறைந்து, வெயில் நிலவுவதால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்துள்ளதால், அறுவடை செய்த நெல்லையும், கொள்முதல் நிலையங்களுக்கு துாக்கி வந்துள்ளனர்.
உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், கொள்முதல் செய்ய வேண்டிய நெல்லையும் சாலையில் கொட்டி வைத்து, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'திருச்சியில், இந்த கிராமங்களில் அறுவடை செய்த நெல் மட்டும் 1 கி.மீ., தொலைவுக்கு, 3,000 நெல் மூட்டைகளாகவும், 10,000 மூட்டை நெல் குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
வெயில் அடிப்பதால், மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட நெல் மணிகள் அவிந்து போக வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால், நனைந்து வீணாகி விடும். மூட்டைகளை ஏற்றி செல்ல, குடோனில் இருந்து லாரிகள் வராததால், மூன்று நாட்களாக காத்து கிடக்கிறோம்' என்றனர்.
வானம் பார்த்து, விதை நெல்லுக்கும், நடவுக்கும், நாற்று நடவுக்கும் ஆள் தேடி, பால்பிடித்ததா, பூச்சிக்குத் தப்புமா என்று ராப்பகல் கவலைப்பட்டு ஒரு விதமாக அறுவடை முடித்து, நெல்லுக்கு காசைப் பார்ப்போமா என்று வந்து அல்லாடும் விவசாயிகளின் ரத்தக்கண்ணீரை அரசு என்று மதித்திருக்கிறது? அவர்கள் ஆலைகளின் மது பாட்டில்களை வெகு அக்கறையுடன் காபந்து செய்யும் கருத்தும், கவனமும், சோற்றுக்காக உழைப்பவர்களின் பாடுகளையும், கவலையையும் உணர காட்டுவார்களா?
ஏம்ப்பா பாவி நெல்லை பின்ன என்ன டைல்ஸ் தரையில் ஆகாய வைப்பார்கள். ஏழை விவசாயி ரோட்ல தான் காய வைப்பார். 50 ஆண்டு கால திராவிடம் ஊருக்கு ரெண்டு நெல் காய வைக்க திடல் கட்ட வேண்டியது தானே.
மீண்டும் விடியல் ஆட்சி அமைந்தால், நெல் சாகுபடி செய்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அனைத்து நபர்களையும் உடனே கைது செய்ய ஏற்பாடு செய்யப்படும்..
மனமா அறிவாளி... செய்வதே அவர்கள்தான்
ஆட்சியில் இருக்கும்போது இன்றே செய்யலாம்.
குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள் வராததால், நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கி கிடக்கின்றன. தயவுசெய்து பொறுத்திருங்கள். வாகனங்கள் தர வேண்டிய "கையூட்டல்" குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன் முன் மழை அல்லது புயல் வந்தால் வேறு ஒன்றும் இல்லை "ஒன்றியமே" காரணம்.
நேற்று முதல்வர் வீரவசனம் பேசி எடப்பாடி டை ஸ்பை பாடினார். இதை முதல்வரிடம் கூறவும். ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதை செய்யாது
கொள்நெல் முதல் செய்ய சிறிது தாமதமாகிறது. இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் செய்தவர்கள் அனைவரும் குண்டாஸ் .
வாங்குறவன் விக்கிறவன் ரெண்டு பேருக்கும் காமன் சென்ஸ் பத்தாது. இப்பிடியா பொறுப்பில்லாம ரோடுல போடுவாங்க? இப்பிடி கெட்டுப் போன மட்டை அரிசியை ரேஷனில் குடுப்பாங்க. வாங்கி துண்ணுங்க.
தூண்டுறதே நம்ம அப்பாவி தான்
கொள்முதல் செய்த நெல்லை முறையாக சேமிக்க கிடங்குகள் இல்லாமல் போனது. இப்பொழுது அவற்றை எடுத்து செல்ல வாகனங்கள் இல்லை. ஆனால் கலைஞருக்கு ஊர் முழுக்க சிலைகள் வைக்க எல்லாம் இருக்கு. நீங்கள் வொவொருமுறை சாதம் சாப்பிடும்போதும் அந்த அரிசி எப்படி விளைந்தது, யார் விளைவித்தது, எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு விளைவித்தார்கள் என்று யோசித்தால் பிறகு விவசாயிகளின் கஷ்டம் புரியவரும்.மேலும்
-
விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
-
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
16 அங்குல பசு!
-
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
-
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி