காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கவுகாத்தி: அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளிகள் அதிகம் வாழும் ஸ்ரீபூமி மாவட்டத்தில் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமார் சோனார் பாங்லா' பாடலை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பாடியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பாஜ உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, "வங்கதேச தேசிய கீதத்தை பாடியதை ஒருபோதும் ஏற்க முடியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன். சட்டத்தில் உள்ள விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்," என்றார்.
அதேவேளையில், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தேசிய கீதங்களை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வங்கதேச தேசிய கீதத்தின் இரு வரிகள் மட்டுமே பாடப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியா போடும் சோற்றை தின்றுவிட்டு அந்நியர்களுக்கு விசுவாசமாக இருப்பது - அந்நியர்கள் ஆரபித்து சிதைந்து பின்னர் இ.காங்கிரஸாக உருவெடுத்த - காங்கிரசுக்கு புதிதல்ல...
இப்படியே விட்டால் நாளை பாக்கிஸ்தான், சீனா தேசியகீதம் எல்லாம் பாட ஆரம்பித்துவிடுவார்கள். உடனே நடவடிக்கை எடுக்கவும். பாடியவனை, அவனுக்கு ஆதரவு நல்கிய காங்கிரெஸ்காரர்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்தவும்.
இத்தாலிய மாபியா கூட்டம் திருந்துவதாக தெரியவில்லை
தாகுர் இந்த பாடலை இயற்றியுள்ளார் என்று சொன்னதில் தவறு இல்லை. ஆனால் எங்கு, எந்த நேரத்தில் சொல்லவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும்.
மரை கழண்டு போய்விட்டதோ. கிறுக்குத்தனமா எதையாவது பண்ணிக்கிட்டு. அருவருப்பாக இருக்கிறது. எரிகின்ற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றி விளையாடுவதால் எரிவது கிருக்காங்கிரஸே.மேலும்
-
அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை: த.வெ.க. திட்டவட்டம்
-
திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்
-
2 மாதத்தில் இடுக்கி அணையை 27,700 சுற்றுலா பயணியர் ரசிப்பு
-
பசும்பொன்னில் மூன்றடுக்கு பாதுகாப்பு; வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
-
ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் 30 மாவட்டங்களில் இல்லை
-
மின்சாரம் தாக்கி பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு