அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ' பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்' என இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். 10 நாள் கெடுவும் விதித்திருந்தார்.
செய்தியாளரின் கேள்விக்கு, 'என்னை கட்சியை விட்டு நீக்கினால் சந்தோஷம்' என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கழகத்தில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
நாளை பேட்டி
இது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் கூறுகையில், '' நாளை( நவ.,01) காலை 11 மணிக்கு இது குறித்து விரிவாக பேசுகிறேன்,'' எனத் தெரிவித்தார்.
தொடர் வெற்றி
1972 ல் எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன், 1977 ல் முதல்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு,1980 முதல் 2021 வரை கோபி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய இடம்பெற்றிருந்தார். அவரது பிரசார திட்டமிடலை வகுத்து கொடுத்தார். இபிஎஸ் முதல்வராக இருந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
நல்லது. செங்கோட்டை இனிமே தவெகவுடன் ப்ரீ டிரேட் அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்.
இதை முன்பே செய்து இருக்கனும்...நல்ல முடிவு.
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா இதில் என்ன சம்பந்தம்
கொடியுடன் வந்து போட்ட புள்ளையார் சுழி கோணல் ஆனது புள்ளையாரும் கைவிட்டு விட்டார் , செங்கோட்டையை நீக்கி கோட்டையை கைநழுவ விட்டாச்சு,நெல்லை வைத்து பேசினா வெயில் வந்து காய்ந்து விட்டது. எல்லாம் சேர்க்கை அதாவது கிரக சேர்க்கை சரியில்லையோ.
எடப்பாடி - அதிமுக உறவு/இருப்பு என்பது கரடியின் பிடியில் சிக்கியுள்ள மனிதன் போன்றதே.. எடப்பாடி தலைவர் ஆக தொடர்ந்தால் அதிமுக காலி.. எடப்பாடி -அதிமுக உறவு/தொடர்பு இல்லை என்றால் எடப்பாடி கதை காலி..
இதுபோன்ற கரையான்களை இன்னும் வைத்திருந்தால் அதிமுகவை அரித்து அழித்து விடுவார்கள். ஜெ. அம்மையார் சொன்னது மாதிரி ஒரு கூந்தல் போனது என்று தூர எறிய வேண்டும். இனி அறிவில்லாஆலயத்தில் தான் வேலை இவங்களுக்கு.
எடப்பாடி நயவஞ்சகர். அதிமுகவை அழித்த அயோக்கியர்... திமுக சுடலையுடன் கூட்டாளி...
இதன் மூலம் திமுக வின் வெற்றியை உறுதி செய்தார் பழநி
அதிமுகவை பொறுத்த மட்டில் பிரம்மா: எம் ஜி ஆர், விஷ்ணு: ஜெயலலிதா, சிவன்: எடப்பாடி கே பழனிசாமி
ஜெயலலிதா அம்மையார் மரணப்படுக்கையில் இருந்தபோது 450 கோடி ஊழல் பணம் கொடுத்து ஒரு சர்க்கரை ஆலை தோழியால் வாங்கப்பட்டதாக செய்தி நாளிதழ்களில் வந்ததே
அமிசாவின் அடிமை கட்சியிலிருந்து நீக்கமா,,,
பார்ர்ரா இன்பநிதியின் கொத்தடிமை கருத்து சொல்லுறா ஹீஹீஹீ
இதன் மூலம் திமுக வின் "பி" டீம் என்று பழனி உறுதி செய்கிறார், திமுக வின் வெற்றியை உறுதி செய்கிறார்மேலும்
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு
-
நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்; இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
-
அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்!
-
நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம்: கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் அதிரடி