காங்கிரஸ் எம்பி கார்த்தியின் சொத்து முடக்கம்: உறுதி செய்தது தீர்ப்பாயம்
புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, மொரீஷியஸ் நாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெற்றது.இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதற்கு, அப்போதைய மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு கார்த்திக்கு சொந்தமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ரூ.54 கோடி மதிப்புளள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், கார்த்தியின் சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (16)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
01 நவ,2025 - 05:39 Report Abuse
சொத்துக்களை மட்டும் முடக்குவது வெட்டி வேலை. கில்லாடி வேலை செய்தவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சுற்றித்திரிகிறார்... அதுவும் எம்பியாக. இது தலைகுனிவு. 0
0
Reply
S SRINIVASAN - ,
31 அக்,2025 - 22:12 Report Abuse
ஏடு கொண்டல வாடா. வெங்கடரமணா. கோவிந்தா. கோவிந்தா.. கோவிந்தா... 0
0
Reply
Venkat esh - ,இந்தியா
31 அக்,2025 - 21:40 Report Abuse
சிதம்பரம் ,கார்த்தி இருவரும் யோக்கிய புண்ணாக்கு எல்லாம் இல்லை 0
0
Reply
nv - ,
31 அக்,2025 - 21:35 Report Abuse
திருட்டு கும்பலின் அடுத்த தலைமுறை!! நம்முடைய சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி இதுவரை தப்பி விட்டனர்!! இன்னும் நிறைய சட்ட போராட்டம் நடவடிக்கை தேவை இவர்களை உள்ளே போட!! நீதி வெல்லுமா இந்த கலி காலத்தில்?. 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
31 அக்,2025 - 21:10 Report Abuse
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ , தீர்ப்பு வருவதற்கு. மோசமான நீதி துறை. பணம் இருந்தால் நீதி துறையும் தலை வணங்கும் 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
31 அக்,2025 - 21:08 Report Abuse
யப்பா யப்பா 54 கோடி.... எம்மாம் பணம். இதை விட்டா அவரு சாப்பிட கூட காசு இருக்காது. என்னா பண்ணுவாரோ பாவம். 0
0
Reply
Velan Iyengaar, Sydney - ,
31 அக்,2025 - 20:34 Report Abuse
என்ன ஒரு dravida முட்டு எவரையும் காணோம்...? 0
0
Venkat esh - ,இந்தியா
31 அக்,2025 - 21:44Report Abuse
வாங்கும் 200 ரூபாய்க்கு எவ்வளவு தான் முட்டுக்கொடுக்க முடியும் 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
31 அக்,2025 - 20:24 Report Abuse
கொள்ளையடித்துவிட்டு அவ்வப்போது பிஜேபியை ஆதரித்து பேசினால், கேஸில் இருந்து தப்பித்துவிடலாம் என்று கனவு கண்டார். பிஜேபியில் ஆட்சியில் பிஜேபிக்காரர் ஊழல் செய்தால் கூட தப்பிக்க முடியாது. 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
31 அக்,2025 - 20:11 Report Abuse
சொத்துக்களை மட்டுமே முடக்கினால் போதாது 0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
31 அக்,2025 - 19:51 Report Abuse
இவ்வளவு கொள்ளை அடிச்சவர்கள் எப்படி தான் பரம யோக்கியன் போல பேச முடிகிறதோ. நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு
-
நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்; இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
-
அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்!
Advertisement
Advertisement