ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

மதுராந்தகம்:கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று, பவுர்ணமியொட்டி, மக்கள் சுபிக்ஷமுடன் வாழ பூஜைகள் செய்து, பக்தர்கள் கொண்டு வந்த அரிசி மற்றும் காய்கறிகளால் ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடந்தது.

பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி

செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களுரு, கடலுார், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement