சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பேரணியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் செயல்படும், மேரா யுவ பாரத் சார்பில் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணியை துவக்கி வைத்தார்.
பின், வேளாண் துறை சார்பில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், சம்பா பருவத்தில் காப்பீடு செய்ய, விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
பின், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.
மேலும்
-
பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல் : கண்டமங்கலம் அருகே மூவர் கைது
-
ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது
-
மாணவர்களுக்கு 'ராஜ விருந்தாக' பட்டம் இதழ்: ஆச்சார்யா கல்வி குழும அரவிந்தன் பேச்சு
-
சாதித்த மாணவிகள் பெருமிதம்
-
போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுகிறது 'தினமலர் பட்டம்' இதழ்: ஏ.கே.டி., கல்வி நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
-
படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா 'அட்வைஸ்'