ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
பாட்னா: ''ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்; ஆர்ஜேடி-காங்கிரஸ் அவர்களை பின்வாசல் வழியாக இந்திய குடிமக்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர்,'' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
பீஹார் மாநிலத்தில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ., 06) முதல் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக, ஹராரியாவில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்ற பிறகு மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்றது.
பாஜ தலைமையிலான மத்திய அரசு பீஹார் மாநில விவசாயிகளுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது. ஆர்ஜேடி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. நிதிஷ் குமார் ஆட்சி காலத்தில் தான் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்தன.
சமூக நீதியின் பூமி
1990-2005ம் ஆண்டு வரை ரவுடிகள் ராஜ்ஜியம், பழி தீர்த்தல், ஊழல் என பீஹாரில் இருந்ததை ஒழித்துள்ளோம். 15 ஆண்டுகளாக இந்த காட்டாட்சி ராஜ்ஜியம் பீஹாரை பேரழிவுக்கு உட்படுத்தியது. உங்கள் தாத்தா, பாட்டியின் ஒரு ஓட்டு பீஹாரை சமூக நீதியின் பூமியாக மாற்றியது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதல் தற்போது பீஹாரில் உள்ள துணை முதல்வர் வேட்பாளர் 'காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு' எதிராகப் பேசும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்;
அதிகமாக ஓட்டளியுங்கள்
ஆர்ஜேடி-காங்கிரஸ் அவர்களை பின்வாசல் வழியாக இந்திய குடிமக்களாக மாற்ற முயற்சி செய்கிறது. இன்று முதல் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவில், பீஹார் வளர்ச்சிக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். மாநிலத்தில் ஊடுருவல்கள் பெரிய சவாலாகவே உள்ளன. ஊடுருவல்காரர்களை ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆதரிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக ஓட்டளிக்க வேண்டும்.
பீஹார் மக்கள் காலையிலிருந்தே ஓட்டுச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பீஹார் இளைஞர்களிடையே முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் நிலவுகிறது. அனைத்து வாக்காளர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்திய நாட்டு மக்கள் யாரும் அவர்களை மதிப்பதே இல்லை.. அவர்களது நம்பிக்கையே அவர்களை போன்ற ஊடுருவல் ஆட்களின் ஓட்டு தான்.. பிறகு எப்படி ஆதரவு கொடுக்காமல் இருப்பார்கள் ?
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி மீண்டும் கிச்சுகிச்சு.
லண்டன் அறிவிலிகள் பப்புவுடன் கூட்டணி
அமைதி நல்லிணக்கம் என்று குரல் எழுப்பும் மர்ம நபர்கள் பாகிஸ்தானில் 22% மற்றும் பங்களாதேஷில் 40% இருந்த மக்களை இனஅழிப்பு செய்தது எப்படி என்று சொன்னால் நல்லது. உண்மை முகம் எல்லாருக்கும் தெரியும். இலங்கையில் சர்ச் குண்டு வெடிப்பு இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை திகழ்.
அரைச்சு அரைச்சு புளிச்ச மாவு
பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருதுடோய் ஹாஹாஹா
நூற்றியொன்று தொகுதிகளில் போட்டியிடும் பாஜக ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்தவில்லை இதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவை இல்லை என்பதையும் மந்த வேர்ஊறித்திளைக்கும் மாக்கள் வாக்கு மட்டும் போதும் என்கிறது. இது ஆபத்தான ஜனநாயகம் அறிவார்ந்த மக்கள் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை தகர்க்க அதிகமதிகம் வாக்களிக்க வேண்டும் குழந்தைகள் தினத்தில் பாரத பிரதமருக்கு லாலிபாப் பரிசளிக்க வேண்டும்.
அந்த புளிச்ச மாவு தான் வேணும்னு பப்பு கேட்குது ரஹீம்.பாய்
2013 பாஜக உள்ளே வந்துடும். இப்போது வரை தமிழ் நாட்டில் பாஜக உள்ளே வந்துடும். இதுதான் திமுக காங்கிரஸ் விசிக சொல்லி கொண்டே வருகிறார்கள். இதுவும் புளித்த மாவுதான்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக ஒரு முஸ்லிமூக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. வரலாறு முக்கியம். யாரை யார் குறைகூறுவது?
விடியல் தலைவர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சமாளிக்கிறார்...
வேற வேலை இல்லை
பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஹாஹாஹா
பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் உங்க கண்ட்ரோல் கீழ தான வருது ? Nenga ஏன் பங்களாதேஷி காரண ஊடுருவ விட்டிங்க ?
வோட்டு திருட்டுக்கு எல்லாம் செட் பண்ணியாச்சு இன்னும் என் இப்படி போராடுகிறார் தலை
இன்னும் சவுண்டு கதறு
எவளோ அழுது புரண்டாலும் உமக்கு அதே அலுமினிய தட்டு தான் திகழ்
நீங்கள் தமிழ்நாட்டில் செய்ததை பற்றி கூற வேண்டாம்....மேலும்
-
'வரதர் கோவில் பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை'; தங்க பல்லி என்பதே இல்லை என உதவி கமிஷனர் விளக்கம்
-
பொதுக்கூட்டங்களில் சேதம் ஏற்பட்டால் ஈடு செய்வதற்கு கட்டணம் நிர்ணயம்; கட்சிகளிடம் ரூ.20 லட்சம் வரை வசூலிக்க முடிவு
-
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு
-
ரூ.10,380 கோடி அள்ளி கொடுத்த பெரும் செல்வந்தர்கள்; தினசரி ரூ.7.40 கோடி தந்து ஷிவ் நாடார் முதலிடம்
-
தோல்வியை அறிந்து விட்டனர்!
-
பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்; 5 பேர் பலி