பொதுக்கூட்டங்களில் சேதம் ஏற்பட்டால் ஈடு செய்வதற்கு கட்டணம் நிர்ணயம்; கட்சிகளிடம் ரூ.20 லட்சம் வரை வசூலிக்க முடிவு
அனைத்து கட்சி கூட்டத்தில் பொதுக்கூட்டம், ரோடு ஷோ தொடர்பாக, அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் விபரம்:
* பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சியை நடத்துபவர்கள், உரிய படிவத்தில் மனுவை, தொடர்புடைய காவல் நிலையம் அல்லது அதிகாரியிடம் வழங்க வேண்டும். கூட்டம் நடக்கும் இடம், வழித்தடம், நாள், நேரம், எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்டம், பங்கேற்கும் முக்கிய நபர்கள், பேச்சாளர்கள், கூட்டத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும்.
* காவல் துறையினர் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்து, கலெக்டர் அறிக்கை வெளியிடுவார். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட இடத்தின் கொள்ளளவிற்கு உட்பட்டு, எதிர்பார்க்கப்படும் கூட்டம் இருந்தால், அதை மனுவில் குறிப்பிட வேண்டும்.
மாற்று இடத்தை தேர்வு செய்யும்பட்சத்தில், அந்த இடத்தின் வரைபடம், அவசர கால வழி உள்ளிட்ட விபரங்கள், கொள்ளளவு குறித்த பொதுப்பணித்துறை பொறியாளர் சான்று, நில உரிமையாளரின் ஒப்புதல் கடிதத்தையும் மனுவில் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
* இடத்தின் கொள்ளளவு, பாதுகாப்பு, போக்குவரத்து வாகன நிறுத்தம், அவசர கால ஏற்பாடுகள் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மனுவை காவல் துறை அதிகாரி பரிசீலனை செய்வார். கூட்டம் நடத்துவதற்கு, குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக அதிகாரி தெரிவிப்பார்.
* காவல் அதிகாரி, அந்த நிகழ்ச்சியை குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, அதிக ஆபத்து கொண்ட நிகழ்ச்சியாக வகைப்படுத்துவார். மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் புதிய மனுவாக கொடுக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள், ஒரே இடத்திற்கு, ஒரே நேரத்திற்கு பெறப்பட்டால், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* வருவாய், காவல், மக்கள் நல்வாழ்வு, பொதுப்பணி, மின்சாரம், தீயணைப்பு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான நிகழ்ச்சி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவை, கலெக்டர்கள் அமைக்க வேண்டும்.
* அனுமதி கோரும் கட்சிகள், நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த வேண்டும். பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு பொறுப்பேற்று இழப்பீட்டை வழங்க வேண்டும். அவசரகால ஊர்திகள் இடையூறின்றி செல்வதற்கு வழியை உறுதிப்படுத்த வேண்டும்.
பொது மக்களுக்கு இடையூறின்றி வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்த வேண்டும்.
கர்ப்பிணியர், பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தனி இடம் ஒதுக்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக, மனுவுடன் எழுத்துபூர்வ உறுதிமொழியை அளிக்க வேண்டும்.
* நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தன்னார்வலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும், ஒலிபெருக்கி வசதிகள் செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில், தேவையான 'சிசிடிவி' கேமராக்களை நிறுவ வேண்டும். ஜெனரேட்டருடன் போதுமான ஒளி வசதி செய்ய வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு, 10 நாட்களுக்கு முன்னதாகவும், மாற்று இடத்திற்கு, 21 நாட்களுக்கு முன்னதாகவும் அனுமதி கோரி மனு கொடுக்க வேண்டும். அதில், முதலுதவி மையங்கள், அவசரகால மருத்துவ ஊர்திகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்கள் விபரங்களை குறிப்பிட வேண்டும்.
* நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஒருவரையும், அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு ஒருவரையும் நியமிக்க வேண்டும். ரோடு ஷோ நடக்கவுள்ள வழித்தடம், அங்கீகரிக்கப்படாத இடமாக இருந்தால், பொதுப்பணித்துறை பொறியாளரால் முன்பே சான்றளிக்கப்பட்ட அந்த இடத்தின் கூட்டம் குறித்த கணக்கீடு, தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறைகளிடம் இருந்து எழுத்துபூர்வமான அனுமதி விபரங்களையும் மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
* ஆபத்து வரையறைக்கு ஏற்ப, காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை வகுக்க வேண்டும். போதுமான காவலர்களை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
தற்காலிக சோதனைச்சாவடிகள்அமைத்து நபர்களை சோதனை செய்ய வேண்டும். 'மெட்டல் டிடெக்டர், சிசிடிவி, ட்ரோன்' மற்றும் அவசரகால தேவைக்காக, கூடுதல் காவல் துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* குறைந்த ஆபத்து என வரையறை செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு, 200 பேருக்கு ஒரு காவலரையும், மிதமான ஆபத்து என்று வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு, 100 பேருக்கு ஒரு காவலரையும்,அதிக ஆபத்து என வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு, 50 பேருக்கு ஒரு காவலரையும் பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும்.
* மேடை, பந்தலின் உறுதித்தன்மை, மின்சார உபகரணங்கள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை தொடர்பான சான்றிதழை, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியாளரிடம் இருந்து பெற்று, நிகழ்ச்சிக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். வருவாய், நகராட்சி நிர்வாகத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு, கொடிக் கம்பங்கள், டிஜிட்டல் பேனர்கள் அமைக்க வேண்டும்.
* இடத்தின் கொள்ளளவை விட அதிக அளவில் கூட்டம் கூடினால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தடுப்புகள், கயிறுகள் வாயிலாக தனி இடத்தில் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* சேதம் ஏற்பட்டால் அதை ஈடு செய்வதற்காக, 5,000 - 10,000 பேர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு, 1 லட்சம் ரூபாய்; 10,000 - 20,000 பேர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு, 3 லட்சம்; 20,000 முதல் 50,000 பேர் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு, 8 லட்சம்; 50,000 பேருக்கு மேல் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாயும் வைப்புத் தொகையாக நிர்ணயிக்கலாம்.
* நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குறிப்பிட்டதை விட, 50 சதவீதத்திற்கு அதிகமான கூட்டம் கூடினால், அது தீவிர விதிமீறலாக கருதப்பட்டு, வைப்புத்தொகை பிடித்தம் செய்யப்படுவது மட்டுமின்றி, சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
* நிகழ்ச்சிக்கு முன், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ போன்றவற்றை மூன்று மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், முடிந்தாலும், கூட்டத்தினர் அமைதியாக கலைந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
* நிகழ்ச்சி நடத்திய பின், மாவட்ட கண்காணிப்பாளரின் குறிப்புகளின்படி, விதிமீறலுக்கு ஏற்ப வைப்புத் தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கலெக்டர் பிடித்தம் செய்யலாம். காயம், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏதேனும் விளைவிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வைப்புத்தொகையை பயன்படுத்தலாம். வைப்புத்தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலோ அல்லது பாதியாக பிடித்தம் செய்யப்பட்டாலோ, மீதி தொகையை 15 நாட்களில் திருப்பித் தர வேண்டும்.
* நிகழ்ச்சியின் போது, 100 நபர்களுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில், கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கூட்டத்தினரை முறைப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக, தன்னார்வலர்களுக்கான பணிகள் குறித்து விரிவான திட்டம் வகுக்க வேண்டும்.
* நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு 500 நபர்களுக்கும், அமர்ந்திருக்கும் ஒவ்வொரு 1,000 நபர்களுக்கும் தனித்தனியே தடுப்பு பகுதிகள் அமைக்க வேண்டும்.முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அடையாள அட்டை அல்லது 'பேட்ஜ்' வழங்க வேண்டும்.
* இந்த வழிகாட்டு நெறிமுறைகள், 5,000 பேருக்கு அதிகமாக கூடும் பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கலாசார, மத வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு பொருந்தும். ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில், மரபுப்படி நடத்தப்படும் மத வழிபாடு மற்றும் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.
* இந்திய மற்றும் தமிழக அரசின் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலங்களில், தேர்தல் ஆணைய விதிகள் பின்பற்றப்படும். எனினும், கூட்டத்தின் போது பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குதல் போன்றவற்றிற்கு, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.
* மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரங்களை, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. தொடர்புடைய அதிகாரிகள், இந்த வழிகாட்டு நெறிமுறையின் படிவங்களில் தேவைக்கேற்ப திருத்தங்கள் அல்லது மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக, கூடுதல் நிபந்தனைகள் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
கட்சிகள் மூன்று விதங்களில் மக்கள் கவனத்திற்கு கருத்துகளை கொண்டு செல்கின்றன. 1 ஆர்ப்பாட்டம் 2 பேரணி 3 பொது கூட்டம். முதல் இரண்டும் தீடீரென முடிவு செய்ய படுவது. பொது கூட்டம் மட்டுமே நின்று நிதானமாக செய்ய படுவது. தேர்தல் காலங்களில் இதுவும் பொருந்தாது. மற்ற நேரங்களில் பொது கூட்டங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை. மக்களிடம் கருத்து தெரிவிப்பது மக்கள் இருக்கும் இடங்களில் தான் நடத்த முடியும். சோதனை முயற்சியாக எல்.சி.டி திரைகள் மூலம் பொதுக்கூட்டங்கள் நடத்த முயற்சிக்கலாம். அரசு எல்.சி.டி. திரைகள் அமைத்து, அதற்கு கட்சிகளிடம் வாடகை வாங்கி கொள்ளலாம். அந்த ஊரின் ப்ளஸ், மைனஸ் காணொளி ஒளிப்பரப்பி, தலைவர்கள் தங்கள் கருத்துகளை நேரலையில் மக்களிடம் கூறலாம். பொது கூட்ட மைதானங்கள் அனைத்து ஊரிலும் அமைப்பது கடினம். மைதானம் கிளினிக், பராமரிப்பு, மக்கள் வரவில்லை என்றால் அனைத்தும் வேஸ்ட். ஆளும்கட்சி முதலில் விதிமுறைகள் பின்பற்றி கூட்டம் நேரலையில் நடத்தி காட்ட வேண்டும். முன் தேதியிட்ட அனுமதி கடிதங்களுடன், வைப்பு தொகை டிரான்ஸ்ஃபர் அனைத்தும் செய்துமுறை விளக்கமாக செய்து காட்டினால் இன்னும் சிறப்பு.
ஆளும் திமுகவுக்கு பொருந்துமா? மேலும் இந்த மோசமான பண வசூலிப்பு ஊழலுக்கு தான் வழி வகுக்கும். கூட்டம் சுமுகமாக முடிந்து பணத்தை திரும்ப கேட்டால் திமுகவுக்கு கமிஷன், காவலருக்கு கமிஷன் என்று கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.
காரணம் நாலரை வருசமா கஜானாவைச் சுரண்டிச் சுரண்டி காலியாக்கிட்டோம் ...... இப்படித்தான் செஞ்சு ஓரளவு அதை சரி செய்யணும் ......
மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கும் மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சிக்கும் இது பொருந்துமா
ஆளுங்கட்சிக்கு இது பொருந்துமா
ஆளும் திமுக கட்சி தவிர
மக்கள் ஒழுக்கத்தோடு இருந்தால் எல்லாம் கூட்டங்களும் நல்ல விதமாக நடக்கும் .
சட்டமாவது கத்தரிக்காயாவது. சட்டம் என்பது கோர்ட்டுகளுக்கே..
முதல்ல இங்கே ஆளும்கட்சிக்கு மின் கட்டண முன் பணம் வசூலிக்க வேண்டும். அவர்களின் ஓட்டு திருட்டை போல மின் திருட்டை தடுக்க வேண்டும்.
அப்போ உன் தீய மூ கா தான் நிறைய பணம் கொடுக்க வேண்டும். திருட பிறந்தவர்கள் ட்ராவிடிய பெல்லொஸ்
மாற்று இடம் வேண்டாம் ஒரு ஊருக்கு ஒரே இடம் தான் மக்கள் போக்கு வரத்து வழியில் கொடுக்கவே கூடாது பெரிய மைதானங்கள் மட்டும்மேலும்
-
மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்ளக்கூடாது: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை
-
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
-
பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்: பிரதமர் மோடி நம்பிக்கை
-
இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்: பாக் அணு ஆயுத சோதனை குறித்து ராஜ்நாத் சிங் பதிலடி
-
எறும்புகளுக்கு பயப்படும் வினோத மனநோய்; தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை
-
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம்