ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: ''ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. தன் மகனை குறை சொல்கிறார்களே என்ற வேதனையை, விமானியின் தந்தை சுமந்து கொண்டிருக்க தேவையில்லை,'' என்று வழக்கு விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் 241 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தில், பிரிட்டனை சேர்ந்த 40 வயது விஸ்வாஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார்.
விமான விபத்து, விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கொண்ட குழு அமைக்கவும், விமான விபத்து பணியகம் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணையை முடிவுக்கு கொண்டு வரவும், மறைந்த பைலட் சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (நவ., 07) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ''விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையிடப்பட்ட விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பெயர் குறிப்பிடாத இந்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 'இந்த சம்பவத்திற்கு விமானியின் தவறு தான் காரணம்' என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இது பற்றி வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதி பாக்சி, ''வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ''அது ஒரு மோசமான செய்தி. விமானியின் தவறு என்று இந்தியாவில் யாரும் நம்பவில்லை. ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. எனவே விமானியின் தந்தை தன் மகனை குறை சொல்கிறீர்களே என்ற வேதனையை சுமந்து கொண்டு இருக்க தேவையில்லை. இது போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு குறிப்பிட்ட விதிகள் உள்ளது,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், ''விதி 9ன் கீழ் முதற்கட்ட விசாரணை மட்டுமே நடந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணையை நாங்கள் விரும்புகிறோம். விமான விபத்து விசாரணைகள் தொடர்பான சர்வதேச மரபுகளுக்கு இணங்க விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், என்றார்.
பின்னர், இந்த மனு குறித்து பதில் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
விமான விபத்திற்கு முழு காரணம் போயிங் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறே உண்மை குறிப்பாக அமெரிக்கா நிறுவனம் விமான விபத்து எங்கு நடந்தாலும் கூறும் ஒரே பொய் விமானி மனநிலை சரியில்லாதவர் அப்படியானால் போயிங் நிறுவன விமானிகள் அனைவரும் பைத்தியமா சுமார் இருபது வருடமாக இதே கோளாறு போயிங் விமானங்களில் உண்டு அதாவது விமானம் தரை இறங்குவதற்கு முன்பே அல்லது பறக்க ஆரம்பித்தவுடன் என்ஜின் இயக்கம் நின்று போவது இறுதியில் விமானிகள் மேல் பழியை போட்டு விடுவது. விபத்திற்கு காரணம் போயிங் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறே எங்கள் நாட்டு விமானி பைத்தியம் அல்ல என ஒரு அறிக்கை விட்டால் போதும் பல ஆயிரம் கோடி டாலர்கள் நஷ்டமாகிவிடும் அமெரிக்கா நிறுவனத்திற்கும் அமெரிக்கா அரசங்கதிக்கும் வரி.
அப்போ யாரையும் கூரை சூழ முடியாது அல்லவே ? இதுக்கு பேரு தீர்ப்பு ?
குற்றம் சாட்டப்பட்ட தலமைவிமானியின் தந்தையார் கவலைப்படுகிறார், சரி. தர்மிகத்தை ஏட்கும் தந்தை என்றால் முதலில் சரியோ, தவறோ என்மகனை மண்ணித்துவிடுங்க என்பது, எல்லோரின் ஆத்மா சாத்தியடையும். நீதிபதி அவர்கள், விபத்தில் இறந்த அத்தனை உயிர்களின் உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்,
படித்த யாரும் இப்படி கருத்து சொல்லமாட்டார்கள்.
விசாரணையே முடிவடையாத நிலையில் நீதிபதிகள் எப்படி கருத்து தெரிவிப்பது முட்டாள்தனத்தை காட்டுகிறது …இவர்கள் எல்லாம் ஏதனடிப்படையில்
பெயர் குறிப்பிடாத நபர்களின் கருத்துக்களை வெளியிடும் வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளை நம்புபவர்கள் இங்கே உள்ளனர். ஊழல் வழக்கில் தண்டனையும் பெற்று ஜாமினில் வெளியே சுற்றும் அரசியல் வியாதிகளை கொண்டாடும் திராவிஷங்கள்.மேலும்
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும்: மோகன் பகவத் பேச்சு
-
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: மாநில அரசு சார்பில் பாராட்டு
-
விமான சேவை பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல; மத்திய அரசு விளக்கம்
-
சுனில் செத்ரி ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து