பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
தூத்துக்குடி: "பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்" என கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்தார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி அளித்த பதில்: நிச்சயமாக ஆண் ஆக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று.
@quote@பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில், இந்த விஷயங்களில் அந்தப் பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்.
quote
முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். மிக விரைவில் தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்க முடியும். நடவடிக்கை எடுத்ததற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
இவருக்கு வேற வேலை இல்லை.
"ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்." திருவள்ளுவன் சொன்னதே. இவருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளுக்கு முன்பாக இவரனைய பெண்ணியக்கப் போராளிகள் இக்குற்றத்தைக் கண்டித்திருக்க வேண்டும் இப்போது விசாரணை முறையாக நடந்து சாட்சியங்கள் நிரூப்பிக்கப்பட்டு, பிடிக்கப்பட்டவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்றால் பாராட்டலாம் அது நடக்குமா? அதற்கு இவர் என்ன முயற்சி எடுப்பார்?
ஏன் மெழுகு வாதி ஊர்வலம் நடத்தி சூளுரைக்கவில்லை.
எங்கே சிங்கப்பூர் சென்றா?
இதே வாய் உபியில் நடந்து போது என்ன பேசியது. எங்கு நடந்தாலும் தவறுதான். இவர்களது பேச்சில் தெரியும். இதுதான் திராவிட மாடல்
இந்த தடவை சிரித்து கொண்டு நடந்து போகமுடியவில்லையோ மெழுகுவர்த்தி ராணி அவர்களே .
இது மாதிரி ஒரு சம்பவம் நாம எதிர்கட்சியாய் இருக்கும்போது நடந்து , அவங்களும் உடனடியா நடவடிக்கை எடுத்தாலும் , நாம காவல்துறை மந்திரியே , உனக்கு பதவி ஒருகேடான்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ராஜினாமா செய்ய சொல்லி கவர்னர் கிட்ட ஊர்வலமா போயி மனு கொடுப்போம். ஆனா இப்போ ?
மொத்தமாக எல்லாவற்றையும் குழப்பிவிடலாம். அதுதான் முறை. அப்பாவையும் காப்பாற்றும். "பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் ஆண்களுக்கு எதிரான குற்றங்களையும் நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்" அதோடு முடிந்தது வேலை. "இளம் விதவைகள்" அன்று சொன்னது மறந்து போய்விட்டது.
இளம் விதவைகள்" அன்று சொன்னது மறந்து போய்விடவில்லை. அடுத்த ஆறுமாதம் கழித்து கூத்து கட்ட எடுத்துக்கொள்ளப்படும்.மேலும்
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும்: மோகன் பகவத் பேச்சு
-
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: மாநில அரசு சார்பில் பாராட்டு
-
விமான சேவை பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல; மத்திய அரசு விளக்கம்
-
சுனில் செத்ரி ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து