பாக்., அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்திரா அனுமதி தரவில்லை: சிஐஏ முன்னாள் அதிகாரி பேட்டி
வாஷிங்டன்: '' பாகிஸ்தானின் அணுஆயுத திட்டங்களுக்கு முக்கிய மையமாக திகழும் கஹுதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த கடந்த 1980 களில் இந்தியாவும் இஸ்ரேலும் திட்டமிட்டன. ஆனால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா அதற்கு ஒப்புதல் தரவில்லை,'' என அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் முன்னாள் அதிகாரி ரிச்சர்ட் பார்லோவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அமைந்துள்ளது கஹூதா அணுசக்தி நிலையம். அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு இந்த மையம் தான் முக்கியமாக திகழ்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணுஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதற்கும், ஈரானுக்கு வழங்காமல் இருப்பதற்கும் , 1980களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்த இந்த அணுசக்தி மையம் தாக்குதல் நடத்துவது என இந்தியாவும், இஸ்ரேலும் திட்டம் தீட்டியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பரம எதிரி நாடாக ஈரான் திகழ்வதால் அந்த நாட்டிற்கு அணு ஆயுதங்கள் கிடைக்கக்கூடாது என இஸ்ரேல் விரும்பியது.
இச்சூழ்நிலையில், 1980 களில் அணுஆயுத பெருக்கம், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தடுப்பதற்காக பாகிஸ்தானில் பணியாற்றிய சிஐஏயின் முன்னாள் அதிகாரியான ரிச்சர்ட் பார்லோவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
1982 முதல் 1985 வரை அரசின் சார்பில் எந்தப் பணியிலும் நான் இல்லை. அந்த காலகட்டத்தில் அது நடந்து இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். கஹூதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்தியா - இஸ்ரேல் திட்டம் குறித்து கேள்விப்பட்டேன். ஆனால், நடக்காததால், அந்த விவகாரம் தொடர்பாக நான் கவனிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா அனுமதி கொடுக்காதது வெட்கப்பட வேண்டியது. இது மட்டும் நடந்திருந்தால், ஏராமான பிரச்னைகள் தீர்ந்திருக்கும்.
அமெரிக்காவில் அப்போது அதிபராக ரோனால்ட் ரீகன் இருந்த போது, ஆப்கானிஸ்தானில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மறைமுக போர் தொடுத்து இருந்தது. அந்த நேரத்தில் தாக்குதல் நடந்தால், அது இந்த போரை பாதிக்கும் என இஸ்ரேலுக்கு ரீகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பாகிஸ்தான் சாதகமாக பயன்படுத்தி கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அந்த அம்மௌயாரின் குடும்பம் என்றுமே பாக்கிஸ்தான் விசுவாசிகள். பாரத தேசத்து விசுவாசிகள் அல்ல
மோடி போஃபியா புள்ளிராஜா இன்டி கூட்டணியினரை பீடித்து ஆட்டுகிறது அந்த போஃபியா எப்போதும் அவர்களுக்கு இருக்கும்
பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல அயல் நாடுகளுக்கும் பாதிப்பு என்றுதான் தாக்கவில்லை, அணுசக்தி கத்தி இந்தியாவையும் தாக்கலாம் என்று இந்திரா அம்மயார் தடுத்தாங்க, இப்போ அமேரிக்கா தடுத்தது அயல்நாடுகள் பாதிக்கும் என்று.
ஆப்பரேசன் சிந்தூர்ன்னு லாவணி பாடிக் கொண்டு இருக்கும் பாஜக அரசு எதற்காக போரை நிறுத்தியது? பாகிஸ்தான் ராணுவம் போன் போட்டதால் போரை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் சொல்றார். தான் சொல்லி போர் நின்றதாக ட்ரம்ப் சொல்கிறார், நூறாவது முறையாக. பதில் சொல்ல வேண்டிய பிரதமரோ வாயை தொறக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் இந்திராகாந்தியை இழுத்து இவனுங்க வீரத்தை காட்டுறாங்க.
சிந்தூர போர் அல்ல. பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மட்டுமே. இலக்கை முடித்தவுடன் நிறுத்தப்பட்டது. அதில் அமெரிக்கா அளித்த தளவாடங்கள் அழிக்கப்பட்டது டிரம்ப்புக்கு ஏற்பட்ட அவமானம். அதனை மறைக்க தானே போர் நிறுத்தம் செய்ய வைத்ததாக புளுகுகிறார்.
ஆஸ்தானசங், பாகிஸ்தான் ராணுவம் போன் போட்டதால் போரை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் சொல்றார்.. அதுவும் பொய் தானே?
எப்படி கோர்த்து விடுறான் பாரு பக்கி.
இந்திரா உயிருடன் இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. தேவையென்றால் வாஜ்பேயி சொன்னார்ன்னு கூட சொல்லும், சிஐஏ.
இந்தியா பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்கினால், பாக்கிஸ்தான் நம் நாட்டின் மீது அணு ஆயுதங்களை வீசி இருக்கும். நம் நாட்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் இறக்க நேரிடும். இந்நிலையில் பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்க கூடாது என்று தைரியமாக முடிவெடுத்த இந்திராவுக்கு மிக்க நன்றிகள்
சிங்கி அடிப்பவர்களுக்கு புரியாது
பெயருக்குத்தான் அந்த அம்மா இரும்பு பெண்மணி ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது
அந்த குடும்பத்தால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை
அத்தனை கான் கிராஸ் கட்சி அரசுகளும் அமெரிக்க அரசின் சொல்படி தான் நடந்து வந்து இருக்கிறார்கள்..... முன்பை தாக்குதல் நடந்த போது கூட பதில் தாக்குதல் நடத்த விடாமல் கான் கிராஸ் அரசை அமெரிக்கா தடுத்தது என்று அப்போது அமைச்சராக இருந்த ப.சி அவர்கள் உண்மையை உளறி இருக்கிறார்.மேலும்
-
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி மொபைல் போன் பறிப்பு
-
வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரிப்பு
-
மதுராந்தகம் ஏரியில் 300 கன அடி நீர் திறப்பு மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
-
வண்டலுார் ரயில் நிலையம் எதிரே இணைப்பு சாலை தடுப்புச் சுவர் அகற்றம்
-
படாளம் சர்க்கரை ஆலை குடோனில் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்