செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்
செய்யூர்: செய்யூர் ஊராட்சியில் சேதமான வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக செய்யூர் உள்ளது. வடக்கு செய்யூர், மேற்கு செய்யூர், சால்ட் காலனி, தேவராஜபுரம் பாளையார்மடம், புத்துார் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய செய்யூர் ஊராட்சியில் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால்வாய் வழியாக செல்கின்றன.
மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் மண் துார்ந்து போய் உள்ளதால், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.
இதனால் இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
மேலும் கழிவு நீர் குடிநீரில் கலந்து நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வடிகால்வாய்களை துார்வாரி சீரமைத்து, கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்