தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, உபி உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உ.பி. ஆகிய மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் டில்லியில் கார் குண்டுவெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பயன்படுத்தப்பட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டில்லியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பார்லிமென்ட் வளாகம், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லியைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணியை தீவிரபடுத்தும்படி அனைத்து போலீஸ் ஸ்டேசன்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வாகன சோதனை மற்றும் சந்தேக நபர்களை விசாரிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (3)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
11 நவ,2025 - 07:14 Report Abuse
தமிழகத்தில் கோல்மால்புர மன்னர் குடும்ப ஆட்சி ஒழிந்தால் நிலைமை சரியாகிவிடும் ..... 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
10 நவ,2025 - 23:17 Report Abuse
மொத்த பயங்கரவாதிகளும் துண்டுசீட்டு மேற்பார்வையில் டாஸ்மாக் நாட்டில் தான் பதுங்கியிருக்கானுங்க சல்லடை போட்டு தேடுங்கள் 0
0
Reply
Prabhu - Perambalur,இந்தியா
10 நவ,2025 - 21:21 Report Abuse
குண்டு வெடித்தால் மட்டும் உச்ச பட்ச பாதுகாப்பு ஏன் ? அனைத்து சமயம் இதே பாதுகாப்பு கொடுக்க வேண்டும் . 0
0
Reply
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
-
பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
-
இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
-
இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்
-
கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்
-
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
Advertisement
Advertisement